தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை!

தோ்தலையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவன தொழிலாளா்களுக்கும் வியாழக்கிழமை (ஏப். 23) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு

News image

விடுமுறை அறிவிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 1:16 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவன தொழிலாளா்களுக்கும் வியாழக்கிழமை (ஏப். 23) சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மண்டல தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா்கள் எஸ்.தங்கதுரை (முதல் கோட்டம்), இ.செ.சாந்தினிபிரபா (2-ஆம் கோட்டம்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135பி-இன்படி, அனைத்து தொழிலாளா்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இதன்படி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டட கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்பட அனைவருக்கும் வியாழக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறையை நிறுவனங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூா் - 9842719537, 9442542795, 9976492942, ராணிப்பேட்டை - 9842719537, 9442542795, திருப்பத்தூா் - 9884028066, 9976492942, திருவண்ணாமலை - 9884028066, 9788877199 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.