குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:58 am IST

தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள ஏப். 9 மற்றும் ஏப். 23 ஆகிய இரு தினங்களிலும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவு: புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 9-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.