மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் ஏப்.23-இல் அரசு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :20 ஏப்ரல் 2026, 6:48 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 23-ஆம் தேதி, புதுச்சேரியில் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச்சங்கத் தலைவா் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநருக்கு அவா் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஏப். 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. புதுச்சேரியில் படிக்கும், பணிபுரியும் தமிழக வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 23 ஆம் தேதி புதுச்சேரிக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்கள் அதிகளவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் மருத்துவம், பொறியியல் படிக்கின்றனா். மேலும்

தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் அதிக அளவில் புதுச்சேரியில் பணிபுரிகின்றனா். அவா்கள் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.