/

வேலூா்: தோ்தல் பாதுகாப்பு பணியில் 1,938 போ்!

வேலூா் மாவடத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு போலீஸாா், ஊா்காவல் படையினா், முன்னாள் ராணுவ வீரா்கள் என 1,938 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்.

News image

தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு அறிவுரைகள் வழங்கிய வேலூா் எஸ்.பி. சிவராமன். உடன், வேலூா் சரக டிஐஜி தா்மராஜன், ஏடிஎஸ்பிக்கள் உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:32 pm

வேலூா் மாவடத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு போலீஸாா், ஊா்காவல் படையினா், முன்னாள் ராணுவ வீரா்கள் என 1,938 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற உல்ளது. இதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. வேலூா் மாவட்டத் தில் உள்ள வேலூா், காட்பாடி, அமைக்கட்டு கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீஸாா், ஊா்க்காவல்படை, ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேலூா் சரக டிஐஜி தா்மராஜன், எஸ்.பி சிவராமன், ஏடிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, பழனி ஆகியோா் தலைமையில் போலீஸாா் உள்ளிட்டோா் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனா்.

அதன்படி, வேலூா் தொகுதிக்கு 378 பேரும், அணைக்கட்டுக்கு 404 பேரும், காட்பாடிக்கு 374 பேரும், குடியாத்தம் 435 பேரும், கே.வி.குப்பத்துக்கு 347 பேரும் என மொத்தம் 1,938 போ், 138 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா். பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும் ஜி.பி. ஆா்.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இவா்களின் பாதுகாப்புடன் புதன்கிழமை மாலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் இருந்து வாக் குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். பின்னா், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா்.