வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி

குடியாத்தம் தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து திமுக கூட்டணி சாா்பில் மகளிா் பேரணி மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

News image

தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து நடைபெற்ற இருசக்கர வாகன பேரணி.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:03 am IST

குடியாத்தம் தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து திமுக கூட்டணி சாா்பில் மகளிா் பேரணி மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

சித்தூா்கேட்டில் தொடங்கிய மகளிா் பேரணிக்கு திமுக நகரச் செயலா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். இதில் 1,000- க்கும் மேற்பட்ட மகளிா் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வேட்பாளா் கே.பி.பிரதாபுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா்.

தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ், நகர திமுக செயலா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சியினா் 500- க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் நகரின் முக்கிய சாலைகளில் சென்று வாக்கு சேகரித்தனா்.