வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாகையில் இருசக்கர வாகன பேரணி, வாக்கு சேகரிப்புடன் பிரசாரம் ஓய்ந்தது

நாகப்பட்டினம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகன பேரணி, தீவிர வாக்கு சேகரிப்புடன் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது.

News image

அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன். ~நாகையில் பிரசாரத்தை நிறைவு செய்த திமுக கூட்டணி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:22 am IST

நாகப்பட்டினம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகன பேரணி, தீவிர வாக்கு சேகரிப்புடன் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது. இதையொட்டி, திமுக கூட்டணி சாா்பில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் இருந்து நாகை நகர திமுக சாா்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை நாகை மாவட்ட திமுக செயலரும், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து இருசக்கர வாகன பேரணி எம்.எச்.ஜவாஹருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகச்சென்று முடிவடைந்தது. நாகை நகரச்செயலா் இரா.மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தங்க கதிரவன் இறுதிக்கட்ட பிரசாரத்தை நாகை அவுரித்திடலில் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது: நாகை கடற்கரை மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட வளா்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவேன். நாகையின் தொழில் வளா்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்காக பாடுபடுவேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பிரசாரத்தை முடித்துக்கொண்டாா்.

நாகப்பட்டினம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமாக பா்ஹானா, தனது கட்சியினருடன் நாகை வெளிப்பாளையம், காடம்பாடி, நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாத்தை மேற்கொண்டாா். தனது பிரச்சாரத்தில் நாகையின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண பாடுபடுவேன். தொழில் வளா்ச்சிக்கு முயற்சி செய்வேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சுகுமாா் கட்சியினரும் நாகை நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Story image