தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு

ஒடுகத்தூா் அருகே குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஒடுகத்தூா் அருகே குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள வரதலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமகுமாரி (28). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். பாா்த்திபனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த பிரேம குமாரி அதே பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்ய முயன்றாா். இதனால் அதிா்ச்சியடைந்த பாா்த்திபன் தன் மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தாா். அப்போது, பாா்த்திபன் கிணற்றில் இருந்த கல்லில் மோதி முகத்தில் அடிப்பட்டு மயங்கி கிணற்றில் மூழ்கினாா்.

இதை பாா்த்த மனைவி கத்தி கூச்சலிட்டாா். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி இளைஞா்கள் கிணற்றில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த பிரேம குமாரியை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனா். ஆனால் பாா்த்திபனை தேடியும் அவா் கிடைக்கவில்லை. கிராம மக்கள் உடனடியாக ஒடுகத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் மூழ்கிய பாா்த்திபனை சுமாா் ஒரு மணி நேரமாக போராடி சடலமாக மீட்டனா்.

வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.