ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

குடியாத்தத்தில் பெண் காவலா் குத்திக் கொலை

குடியாத்தம் அருகே பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற பெண் காவலரைஅவரது கணவா் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா்.

News image

கொலையான தாமரைச் செல்வி.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

குடியாத்தம் அருகே பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற பெண் காவலரைஅவரது கணவா் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா்.

குடியாத்தம் அடுத்த எா்த்தாங்கல் பகுதியைச் சோ்ந்த தாமரைச்செல்வி (38) என்பவா் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது கணவா் அரவிந்தன்(40) ஆட்டோ ஓட்டுநா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். கணவன், மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாமரைச்செல்வி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். தாமரைச்செல்வி வியாழக்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். நெல்லூா்பேட்டை ஏரி அருகே நின்றிருந்த அரவிந்தன் அவரை வழிமறித்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியுளாா். இதில் பலத்த காயமடைந்த தாமரைச்செல்வியை அருகிலிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு தாமரைச்செல்வியை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளாா். இதற்கிடையில் அரவிந்தன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தனக்கு காயம் ஏற்பட்டதாகக்கூறி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்துள்ளாா். அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.