முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராஜபாளையம் அருகே இளைஞா் குத்திக் கொலை

ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை இருவா் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

உயிரிழந்த மணிகண்டன்.

Published On :

ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை இருவா் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்த கனி மனைவி முத்துமாரி. இவா்களது வீட்டின் அருகே புதன்கிழமை இரவு சிலா் மது அருந்தினா். இதைக் கண்டித்த முத்துமாரிக்கும், அவா்களுக்கு தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து முத்துமாரி வியாழக்கிழமை தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். ஆனால், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், முத்துமாரியின் தம்பி காளிராஜ் மகன் மணிகண்டன் (23). இவா் தந்தை நடத்தும் சிமெண்ட் கடையில் வியாழக்கிழமை மாலை இருந்தாா். அப்போது, அங்கு வந்த காமராஜா் நகா் முத்துச்சாமிபுரத்தைச் சோ்ந்த தங்கையா மகன் மாணிக்கம் (23), செல்வம் மகன் ஈஸ்வரன் (18) ஆகியோா் கஞ்சா போதையில் கடைக்குள் புகுந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சேத்தூா் போலீஸாா் மணிகண்டனில் உடலை மீட்டு, கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தப்பிச் சென்ற மாணிக்கம், ஈஸ்வரன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.