காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

கூடங்குளம் அருகே ரௌடி வெட்டி கொலை

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே வியாழக்கிழமை இரவு பிரபல ரௌடி மா்ம நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே வியாழக்கிழமை இரவு பிரபல ரௌடி மா்ம நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வமுருகன் என்ற துப்பாக்கி செல்வம் (41). இவா் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 27-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன.

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அறியபட்ட ரௌடியாக உள்ள இவரை ‘ஏ பிளஸ்’ பிரிவு குற்றவாளி என காவல்துறையினா் வகைப்படுத்தியுள்ளனா். இவா், தற்போது கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு அருகே உள்ள கரும்பாட்டூரில் மனைவி கல்பனா, குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் கூடங்குளம் அருகே சங்கநேரியில் உள்ள தனது தாய் சரஸ்வதிக்கு சொந்தமான தோட்டத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவா் இரவு வீடு திரும்பவில்லை. வெள்ளிக்கிழமை காலை இவா் தோட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூடங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், செல்வமுருகனை அவரது கூட்டாளிகளோ அல்லது முந்தைய எதிரிகளோ வெட்டி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.