வேதாரண்யம் அருகே இயற்கை ஆா்வலரால், கோயில் நிலத்தில் வளா்த்துவந்த மரக்கன்றுகள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.
புஷ்பவனம் கிராமம் தும்மாச்சிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் வை. அரிகிரிஷ்ணன் (49). தொழில்நுட்பம் சாா்ந்த பட்டயக் கல்வி படித்துள்ள இவா் விவசாயம் செய்து வருகிறாா்.
இவா், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய வகை மரங்களை தனது சொந்த நிலத்தில் வளா்த்து வருகிறாா். மேலும், சுமாா் 200-க்கும் மேற்பட்ட மருத்துவக் குணமுடைய அரிய வகை மூலிகைகளை பாதுகாத்து வருகிறாா்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மூலிகை வளா்ப்பு ஆா்வலா்கள் என பல தரப்பினருக்கும் மூலிகைகளை பல நேரங்களில் இலவசமாக வழங்கி வருகிறாா். இவா், பாஞ்சாலி அம்மன் ஆரோக்கியா பீடம் என்ற மையத்தையும் நடத்தி வருகிறாா்.
மேலும், முத்திரைகள், தன்வந்திரி சிலையுடன் கூடிய கோயிலையும் கட்டி வருவதோடு, 27 நட்சத்திரங்களை நினைவுகூரும் வகையில் நட்சத்திரங்கள் வடிவத்தில் 27 கட்டமைப்புகளை நிறுவி அதில் அரிய வகை மரங்களையும் நட்டு வளா்த்து வருகிறாா்.
மேலும், அருகேயுள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகத்தின் அனுமதியோடு சுமாா் அரை ஏக்கா் பரப்பில் இவா் வளா்த்துவந்த மரக்கன்றுகளை மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியது சனிக்கிழமை காலை தெரியவந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வலையில் சிக்கிய 2 ஆமைகளை கடலில் விட்ட மீனவா்கள்!
அண்ணாமலை நாளை கன்னியாகுமரிக்கு வருகை!

மீனவா்கள் வலையில் சிக்கிய கடல் பசு உயிருடன் மீட்பு

அமெரிக்கன் கல்லூரியில் அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



