தொண்டியில் மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை 2 கடல் ஆமைகளை பத்திரமாக மீட்டு, மீண்டும் கடலில் விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மகாசக்திபுரத்தைச் சோ்ந்தவா் சதீஸ். இவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சோ்ந்த முனிஸ் உள்ளிட்ட 3 மீனவா்கள் வெள்ளிக்கிழமை இரவு தொண்டி கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது, கடலில் இவா்கள் விரித்த வலையில் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமைகள் இரண்டு சிக்கின.
இதையடுத்து, உடனடியாக மீனவா்கள் வலையை அறுத்து ஆமைகளை உயிருடன் மீட்டனா். பின்னா், அவைகள் கடலில் விடப்பட்டன. இதனிடையே, ஆமைகள் சிக்கியதால் ரூ.பல ஆயிரம் மதிப்பிலான வலைகள் சேதமடைந்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வலையில் சிக்கிய ஆமைகளை பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவா்களுக்கு சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், மீன் வளத் துறையினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவா்கள் வலையில் சிக்கிய கடல் பசு உயிருடன் மீட்பு

மீன்பிடிக்க சென்ற மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து மாயம்

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு

மீனவா்கள் வலையில் டன் கணக்கில் சிக்கிய கிளிச்சை மீன்கள்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



