வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

இந்தியப் பூர்வீகமற்ற உராங்குட்டான் குட்டிகள்… உயிரியல் பூங்காவில் எப்படி இருக்கின்றன?

ஒடிசா வனப்பகுதியில் சிக்கிய 5 அரிய வகை உராங்குட்டான் குட்டிகளை பற்றி..

Five baby orangutans

உராங்குட்டான்கள் - TNIE

Published On :

ஒடிசா வனப்பகுதியில் செப். 8-ம் தேதி ரோந்து பணியின்போது 5 அரிய வகை உராங்குட்டான் குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்தியப் பூர்வீகமற்ற உராங்குட்டான்கள் இயல்பு நிலையில் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மீட்கப்பட்ட உராங்குட்டான் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது. புது காலநிலை சூழல் என்பதால், உராங்குட்டான்கள் அவ்வப்போது தனது மனநிலையை மாற்றி பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மீட்கப்பட்ட உராங்குட்டான்கள் மன அழுத்தமின்றியும், சூரிய ஒளி படும் வகையிலும் வைத்திருக்க அவற்றைத் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டது. ஆறு மாதங்கள் முதல் ஒரு வயதுடைய உராங்குட்டான் குட்டிகள் மனிதக் குழந்தைகளைப் போலவே உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

சில சமயங்களில் அவை நிம்மதியாகத் தோன்றுகின்றன. அடுத்த கணமே, தாயிடமிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட பதற்றம் காரணமாகவோ என்னவோ, அவை ஒன்றையொன்று இறுக்கமாகப் பற்றிக்கொள்கின்றன.

பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், 'டெடி பியர்' போன்ற மென்மையான பொம்மைகளுடன் விளையாடுகின்றது. வனப்பகுதியிலிருந்து மீட்டபோது இந்தக் குட்டிகள் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டதால், அவற்றுக்குச் சிறந்த கால்நடை மருத்துவச் சிகிச்சையை அளிப்பதோடு, அவற்றின் மனநிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தனிமைப்படுத்தப்பட்ட அறையில் போதுமான இடவசதி இருந்தபோதிலும், அவை ஒன்றையொன்று மிகவும் நெருக்கமாக அமர்ந்திருப்பதும் உறங்குவதுமாக உள்ளனர். அவற்றைப் பராமரிக்க மூன்று விலங்கு பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றுக்குக் கைக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் மில்க் பார்முலா, வேகவைத்து மசிக்கப்பட்ட ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் நீர்ச்சத்து இழப்பை ஈடுசெய்யும் கரைசல் ஆகியவை உணவாக அளிக்கப்படுவதாக உயிரியல் பூங்கா இயக்குநர் தெரிவித்தார்.

உராங்குட்டான்களின் உடல்நிலையை நாள் முழுவதும் கண்காணிக்கக் கால்நடை மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விலங்குகள் உயிரியல் பூங்காவிலேயே தங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறும் வகையில் அனைத்து விதமான பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை இரவு உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டபோது, ​​ஒரு குட்டிக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. மற்ற இரண்டிற்குச் சளி அறிகுறிகளும், இன்னொன்றுக்குக் குடற்புழுத் தொற்று இருந்ததும் கண்டறியப்பட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, அனைத்து குட்டிகளின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளது.

அவை ஆப்பிள், வாழைப்பழம், உலர் பழங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பால் ஆகியவற்றை விரும்பி உண்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், மாநிலத்தில் திடீரென இந்த விலங்குகள் காணப்பட்டதற்குப் பின்னால் சர்வதேசக் கடத்தல் கும்பல் ஒன்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், மாநிலக் காவல்துறையும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகமும் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உராங்குட்டான்கள் இந்தியாவில் காணப்படுவதில்லை. அவை தென்கிழக்கு ஆசியாவில் உள்ள போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகள் உள்பட மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் மழைக்காடுகளைச் சேர்ந்தவையாகும்.

Five baby orangutans, who were recently rescued from Odisha's Balasore district and kept at a zoo here, have been displaying a range of emotions from momentary mood swings, playful actions to anxiously clinging to each other.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.