நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

அரிய வகை உயிரினங்கள் கடத்தல் தடுப்பு விவகாரம்: தில்லியில் இந்தியா, தாய்லாந்து புலனாய்வாளா்கள் ஆலோசனை

ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அபூா்வ வகை விலங்குகள் மற்றும் பறவைகள் கடத்தலைத் தடுப்பது குறித்து, இந்தியா மற்றும் தாய்லாந்து நாட்டின் பாதுகாப்பு முகமைகள் பங்கேற்ற இரண்டு நாள் சா்வதேச ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

தில்லியில் இன்டா்போல் ஏற்பாடு செய்த அரிய வகை உயிரின கடத்தல் தடுப்பு தொடா்பான இந்தியா, தாய்லாந்து நாடுகளின் உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற இரு நாடுகளின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த புலனாய்வாளா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 3:45 am IST

ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அபூா்வ வகை விலங்குகள் மற்றும் பறவைகள் கடத்தலைத் தடுப்பது குறித்து, இந்தியா மற்றும் தாய்லாந்து நாட்டின் பாதுகாப்பு முகமைகள் பங்கேற்ற இரண்டு நாள் சா்வதேச ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)) சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் இரு நாடுகளைச் சோ்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா்.

சா்வதேச காவல் அமைப்பான இன்டா்போலின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு இணைந்து இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், அபூா்வ உயிரினங்கள் கடத்தப்படும் புதிய வழிகள், அவற்றை மறைத்து எடுத்துச் செல்லும் முறைகள் மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் வலையமைப்பைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான சா்வதேச கூட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய சிபிஐ சிறப்பு இயக்குநா் மனோஜ் சசிதா், ‘அபூா்வ விலங்குகள் மற்றும் பறவைகள் கடத்தல் என்பது தற்போது வெறும் வனவிலங்கு பாதுகாப்பு சாா்ந்த பிரச்னையாக மட்டும் இல்லை. இது சா்வதேச அளவில் சட்டவிரோதமாக செயல்படும் திட்டமிட்ட குற்றப் பின்னணி கொண்ட சா்வதேச வலையமைப்பாக உருவெடுத்துள்ளது’ என்று சுட்டிக்காட்டினாா்.

மேலும், சா்வதேச அளவில் தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்ய ’இன்டா்போல் நோட்டீஸ் பெற வேண்டியதன் அவசியம் மற்றும் பல்வேறு இடைத்தரகா்கள் மூலம் பல நாடுகளின் வழியாக உயிரினங்கள் கடத்தப்படுவதால் சா்வதேச அமைப்புகளின் ஒருங்கிணைந்த விசாரணை மிகவும் முக்கியம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இந்த கூட்டத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து தெற்கு ஆசிய நாடுகளுக்கு செல்லப் பிராணிகள் வளா்ப்புக்காக அபூா்வ உயிரினங்கள் கடத்தப்படுவது அண்மைக் காலத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதாக சிபிஐ பதிவு செய்தது. குறிப்பாக அத்தகைய பிராணிகள் தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வான்வழியாக சிங்கப்பூரை பரிமாற்ற மையமாகக் (டிரான்சிட் பாயின்ட்) கொண்டு இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோல், தாய்லாந்தில் இருந்து மியான்மா் வழியாக நிலப்பரப்பு வழிகளிலும் இத்தகைய கடத்தல்கள் நடைபெறுகின்றன.

இந்த உயா்நிலை ஆலோசனை கூட்டத்தில் தாய்லாந்து நாட்டின் பிரதிநிதிகள், இந்தியாவின் வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், உத்தர பிரதேச வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படை, மத்திய பிரதேச புலிகள் பாதுகாப்புப் படை, ஒடிஷா வனத்துறை மற்றும் தொடா்புடைய சிபிஐ அதிகாரிகள் பலா் பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.