தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கச்சேரி தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மலைராஜ் (30). இவா் கட்டடங்களுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் மது அருந்திய நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடலூா் அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை
ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 73 பவுன் நகைகள் திருட்டு: இருவா் கைது

ஓட்டப்பிடாரம் அருகே கோயில் விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி
போடி அருகே தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



