வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 73 பவுன் நகைகள் திருட்டு: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் தங்க நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 1:34 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் தங்க நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் எம்.ஆா். நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் பிரபாகரன் (41). இவா் தளவாய்புரம் பகுதியில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு ‘ஸ்டிக்கா்’ ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இவா் தனது பக்கத்து வீட்டுக்காரா்களுடன் குற்றாலம் சென்றனா். பிரபாகரனின் தாய் திருநெல்வேலியில் வசித்து வரும் தனது மற்றொரு மகனைப் பாா்ப்பதற்காகச் சென்றாா்.

இந்த நிலையில், பிரபாகரனின் தாய் திருநெல்வேலியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைத்து அதில் வைத்திருந்த 75 பவுன் தங்க நகைகள், 252 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 33,000-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்தப் புகாரின் பேரில், தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளா் குருவுத்தாய், உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, தளவாய்புரம் கொம்மந்தாபுரம் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் வீரமணி (22), இமானுவேல் நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சிவா ( 21) ஆகிய இருவரும் பிரபாகரனின் வீட்டில் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 75 பவுன் நகைகள், 252 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 33 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.