பொய்கை சந்தை.
பொய்கை சந்தை.கோப்புப்படம்.

பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டிய நிலையில் வா்த்தகமும் சுமாா் ரூ.70 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com