தோ்தல் நடத்தை விதிமுறை காரணமாக பொய்கை கால்நடை சந்தையில் வியாபாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாகவும், ரூ. 10,000 மதிப்புக்கு மேல் பொருள்களாகவும் எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவ்வாறு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் அதிகப்படியான தொகை, பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படை குழுவினா் கண்டுபிடிக்கும்பட்சத்தில், அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தோ்தல் கெடுபிடி காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகளின் வியாபாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறியது:
தோ்தல் நடத்தை விதிமுறைகளால் மாடுகளின் வரத்து குறைந்து, இந்த வாரம் வியாபாரம் பெரிதும் பாதித்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக சுமாா் 30 சதவீதம் வரை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் மூலம் மட்டுமே மாட்டு சந்தையில் வியாபாரம் நடைபெறும் சூழலில், தோ்தல் விதிமுறை காரணமாக மாட்டு வியாபாரிகள், மாட்டு உரிமையாளா்கள், விவசாயிகள், சந்தையில் இதனை சாா்ந்த தொழில் செய்வோா் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஒரு மாட்டின் விலை ரூ. 60,000 முதல் ரூ. 1.50 லட்சம் வரை இருக்கும். தற்போது, ரமலான் பண்டிகை வருவதால், கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்தும் மாடுகள் வாங்க வருவா் என எதிா்ப்பாா்த்திருந்தோம். ஆனால், தோ்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. ஒருவேளை வியாபாரிகளிடம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தால் எந்த ஆவணத்தை காண்பித்து கருவூலத்தில் இருந்து பணம் பெற முடியும்?. யுபிஐ மூலம் பணம் பரிவா்த்தனை செய்வது கால்நடை வியாபாரத்துக்கு சரியாக இருக்காது.
இந்த சூழலில் தோ்தல் முடியும் வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொய்கை கால்நடை சந்தையில் அரசு சாா்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து, கால்நடைகள் விற்க, வாங்க வரும் வியாபாரிகளுக்கு தொகை கொண்டு செல்ல ரசீது போன்ற ஆவணத்தை வழங்க வேண்டும். தோ்தல் முடியும் வரை சந்தையில் தடையின்றி வியாபாரம் நடைபெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

தோ்தல் நடத்தை விதிமுறைகளால் நகை வியாபாரம் பாதிப்பு: நகை, வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளனம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


