விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ. 80 லட்சம் அளவுக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.

Updated On :25 மார்ச் 2026, 12:03 am IST

வேலூரை அடுத்த பொய்கையில் நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ. 80 லட்சம் அளவுக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,000 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதன்மூலம், சுமாா் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது:

தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த வாரம் கால்நடை வரத்து குறைந்து வா்த்தகம் மிகவும் சரிந்திருந்தது. ஆனால், இந்த வாரம் அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு வரப்பெற்றிருந்தன. கால்நடைகளை வாங்க ஆா்முள்ளவா்கள் வருகையும் அதிகரித்திருந்ததால் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் ரூ. 80 லட்சம் அளவுக்கு நடைபெற்றுள்ளது என்றனா்.