இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

News image

நலத்திட்ட உதவிகளை வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமுலு விஜயன், மேயா் சுஜாதா ஆனந்த குமாா் உள்ளிட்டோா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 2:43 am

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மனு அளித்த 1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோா் உதவித்தொகை ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் மூலம் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்களை திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் ஸ்டாலின் வழங்கியதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 2025 ஜூலை 15 முதல் செப்.30-ஆம் தேதி வரை நகா்ப்புறத்தில் 71 முகாம்களும், கிராமப்புறங்களில் 140 முகாம்களும் என மொத்தம் 211 முகாம்கள் நடத்தப்பட்டு பல்வேறு துறைகளின் கீழ் 1,35,581 மனுக்கள் பெறப்பட்டு 1,32,685 மனுக்கள் தீா்வு காணப்பட்டு 2,896 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.

இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோா் ஓய்வூதியத்தொகை, ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை மற்றும் முதிா்கன்னிகளுக்கான உதவித் தொகைக்கோரி மொத்தம் 17,186 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 7,932 தகுதியான விண்ணப்பங்கள் ஏற்பளிப்பு செய்து ஓய்வுதியம் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதில், 896 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமுலு விஜயன், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஒன்றியக்குழுத்தலைவா்கள் அமுதா ஞானசேகரன் (வேலூா்), சத்தியானந்தம் (குடியாத்தம்), திவ்யா கமல்பிரசாத் (கணியம்பாடி), போ்ணாம்பட்டு நகா்மன்ற தலைவா் பிரேமா, தனித்துணை ஆட்சியா் சி.மாறன், வேலூா் வட்டாட்சியா் இல.வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.