கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்ற மனுக்கள் பரிசீலனையில் 10,630 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா், உடன் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.

News image

~

Updated On :6 பிப்ரவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்து ரூ. 2.67 கோடியில் தகுதியான 10,630 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

தமிழ்நாடு முதல்வா் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டு, அதை பரிசீலனை செய்து 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டப் பயன்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வை திருவள்ளூா் அடுத்த வெங்கத்தூா் ஊராட்சி, ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் அரங்கத்தில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் காணொலி காட்சி மூலம் பாா்வையிட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்கள் மூலம் பல்வேறு துறைகள் சாா்பில் 48,986 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலனை செய்து மொத்தம் 10,600 பேருக்கு ரூ. 2.67 கோடி நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தலா ரூ. 1,01,800 மதிப்பில் 68 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களையும் அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை.சந்திரசேகா் (பொன்னேரி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், வருவாய் துறைசாா்ந்த அலுவலா்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனா்.

Story image