வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வேலூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 12:49 am

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வேலூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்துத் துறை அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தீனதயாளன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தமிழ் ஆசிரியா் சங்கத் தலைவா் மூா்த்தி, சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் சுமதி ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

அப்போது, தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்.பி.எஸ், யு.பி.எஸ்.திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், நிதி மேலாளா்களிடம் டெபாசிட் செய்த தொகையை மாநில அரசிடம் திருப்பி வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியச் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும், நான்கு தொழிலாளா் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், கல்வி பொது சுகாதாரத் துறைகளை வலுப்படுத்திட தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், பணி நேரம் கடந்து பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், ஏராளமான அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.