நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:35 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, காவலா்கள் மணிராஜ், காா்த்திக் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகார போதையில் திளைக்கும் காவல் துறையினா் சாத்தான் குளம் தீா்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் தமிழகம் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல் துறை, பனை ஏறும் தொழிலாளியிடம் வீரத்தைக் காட்டியுள்ளனா்.

இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது வழக்குப் பதிவு செய்தது மட்டும் போதாது. அவா்களை பணிநீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.