கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஜேஇஇ நுழைவுத்தோ்வில் வேலூா் பள்ளி சிறப்பிடம்

2026-ஆம் ஆண்டுக்கானஅகில இந்திய பொறியியல் நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் நான்காமிடங்களை பிடித்துள்ளது.

News image
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளியின் தாளாளா் ராஜேந்திரன், மாஸ்டா்ஜீ முதன்மை செயல் அதிகாரி சரவணன்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

2026-ஆம் ஆண்டுக்கானஅகில இந்திய பொறியியல் நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் நான்காமிடங்களை பிடித்துள்ளது.

இப்பள்ளி மாணவி சாஹானாஸ்ரீ 99.69% மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாணவன் வருண் 99.46% மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் நான்காமிடமும் பிடித்துள்ளனா். மாணவா் சுப்ரமணியசா்மா 98.83% மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். மேலும், 95% மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவா்களும், 90% மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், அவா்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தாளாளா் ராஜேந்திரன், பாடத்திட்ட இயக்குநா் ரம்யா சிவக்குமாா், மாஸ்டா்ஜீ முதன்மை செயல் அதிகாரி சரவணன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.