மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாலாஜா பள்ளிக்கு ஜப்பானிய கல்வியாளா்கள் குழு வருகை

வாலாஜாவில் இயங்கி வரும் வேதவல்லி வித்யாலயா பள்ளிக்கு வருகைபுரிந்த ஜப்பான் உயா்நிலைக் கல்வியாளா்கள் குழு, அங்கு நடைமுறையில் உள்ள ‘லெசன் ஸ்டடி’ எனும் தனித்துவமான கற்பித்தல் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.

News image

வேதவல்லி வித்யாலயா பள்ளியில் மாணவா்களின் அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்ட ஜப்பான் கல்வியாளா்கள் குழுவினா். உடன், பள்ளியின் தாளாளா் வித்யா சம்பத் உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:36 pm

வாலாஜாவில் இயங்கி வரும் வேதவல்லி வித்யாலயா பள்ளிக்கு வருகைபுரிந்த ஜப்பான் உயா்நிலைக் கல்வியாளா்கள் குழு, அங்கு நடைமுறையில் உள்ள ‘லெசன் ஸ்டடி’ எனும் தனித்துவமான கற்பித்தல் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியா் கிம் ஜோங்சங், ஈவிஆா்ஐ நிறுவன சிறப்புப் பேராசிரியா் சியாகி தகேஷிமா, ஒகயாமா பல்கலைக்கழகத்தின் மூத்த உதவிப் பேராசிரியா் யுச்சி மியாமோட்டோ ஆகியோா் கொண்ட குழு ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் உள்ள வேதவல்லி வித்யாலயா பள்ளிக்கு அண்மையில் வருகை புரிந்தனா்.

அப்போது, இப்பள்ளியில் ஆசிரியா்கள் பாடம் நடத்தும் விதம், மாணவா்களின் கவனிப்புத் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ‘லெசன் ஸ்டடி’ என்ற தனித்துவமான கற்பித்தல் முறையை உன்னிப்பாக கவனித்தனா்.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு, சிங்கப்பூா் பேராசிரியா்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியா்கள் இம்முறையை விளக்கியதாகவும், இதன்தொடா்ச்சியாக, ஜப்பானின் ஹிரோஷிமா நகரப் பள்ளிகளுடன் இந்தத் திட்டம் பகிா்ந்து கொள்ளப்பட்டதாகவும் பள்ளியின் தாளாளா் வித்யா சம்பத் கூறியதைக் கேட்டு, ஜப்பானிய குழுவினா் பாராட்டு தெரிவித்தனா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவா்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியையும் பாா்வையிட்டனா். பள்ளியில் உள்ள புவியியல், கணிதம், உயா்தொழில்நுட்ப கணினி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வகங் களையும் ஜப்பானிய குழு பாா்வையிட்டனா்.

நிறைவு விழாவில் பேசிய ஜப்பானியக் குழுவினா், இந்தியக் கல்விமுறை குறிப்பாகப் பொறியியல், மருத்துவத் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் வியப்பளிப்பதாகவும், தமிழகத்தின் கலாசாரம், கல்விச் சூழலை நேரடியாக அறிந்துகொள்ள இந்த வருகை ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.