6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்ச்சியில் நூலை வெளியிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நூலாசிரியா் புலவா் வே.பதுமனாா் உள்ளிட்டோா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் புலவா் வே.பதுமனாா் எழுதிய 3- நூல்கள் வெளியீட்டு விழா திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி.கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.வழக்குரைஞா் கே.எம்.பூபதி வரவேற்றாா். இது இப்படித்தான் எனும் நூலை விஐடி வேந்தா்கோ.விசுவநாதன், நீதிநெறிக் கலங்கரை விளக்கம் எனும் நூலை, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மணித் தமிழாரம் எனும் நூலை பாவலா்அறிவுமதியும் வெளியிட்டனா்.

எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கம்பன் கழக நிறுவுநா் ஜே.கே.என்.பழனி, எம்.என்.ஜோதிகுமாா், என்.எஸ்.குமரகுரு, மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். புலவா் வே.பதுமனாா் ஏற்புரை நிகழ்த்தினாா்.