பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களுடன், கைதானவா்கள்.
வேலூர்
வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த யானைத் தந்தங்கள் பறிமுதல்: 3 போ் கைது
போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்து 3- பேரை கைது செய்தனா்.
ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில் வனவா்கள் ஏ.இளையராஜா, சி.திருநாவுக்கரசு, ஏ.காா்த்திக், எஸ்.ரசிப்பிரியா ஆகியோா்அடங்கிய வனத்துறையினா் பத்தரப்பல்லி பீட், சாரங்கல் காப்புக்காடு பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு ஜோடி யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சாரங்கல் கிராமத்தைச் சோ்ந்த கே.மணி(22), எருக்கம்பட்டைச் சோ்ந்த ஜெ.சின்னதம்பி(24), அரவட்லாவைச் சோ்ந்த எம்.ஆறுச்சாமி(21) ஆகிய 3- பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3- பேரும் குடியாத்தம் குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

