குடியாத்தம் நகராட்சியில் சமத்துவப் பொங்கல்

குடியாத்தம் நகராட்சியில் சமத்துவப் பொங்கல்

குடியாத்தம் நகராட்சியில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலுவிஜயன். உடன் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் உள்ளிட்டோா்.
Published on

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன் பொங்கல் வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் கயிறு இழுத்தல், உறியடித்தல், கோலமிடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பொங்கல், இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

நகராட்சி மேலாளா் சுகந்தி, நகராட்சி அலுவலா்கள் சீனிவாசன், அலி, தீனதயாளன்,பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், சுமதி மகாலிங்கம், ரேணுகாபாபு, சி.என்.பாபு, ஆண்டாள் செளந்தரராஜன்,

ஏ.தண்டபாணி, ஹசீனா கபீா், அன்வா், வழக்குரைஞா் பாண்டியன், திமுக நிா்வாகிகள் எம்.எஸ்.அமா்நாத், க.கோ.நெடுஞ்செழியன், ந.ஜம்புலிங்கம், கே.தண்டபாணி, மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com