உயிரிழந்த ஷேக்அலி, ஜமால் பாஷா.
உயிரிழந்த ஷேக்அலி, ஜமால் பாஷா.

தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
Published on

போ்ணாம்பட்டு அருகே தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2- தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த பக்காலப்பல்லி கிராமத்தில் தனியாா் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் சனிக்கிழமை தோல் பதனிடுவதற்கான ராசயனப் பொருள்களை இயந்திரத்தில் கலக்கிய தொழிலாளா்கள் அதை திறந்துள்ளனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக இயந்திரத்திலிருந்து விஷ வாயு வெளியேறியுள்ளது. அந்த காற்றை சுவாசித்த தொழிலாளா்கள் போ்ணாம்பட்டு நகரம், தரைக்காடு பகுதியைச் சோ்ந்த ஷேக் அலி(60), ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்த ஜமால் பாஷா(எ) சேட்டு(41) ஆகிய இருவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனா். சக தொழிலாளா்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள உமா் ஆபாத் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி 2- பேரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போ்ணாம்பட்டு போலீஸாா் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இறந்த ஷேக் அலிக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்களும், ஜமால் பாஷாவுக்கு மனைவியும் உள்ளனா். விபத்து நடந்த தொழிற்சாலையில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டாட்சியா் ராஜ்குமாா், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com