தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சிஐடியு ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில்குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2026, 12:02 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில்குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் சி.சரவணன் தலைமை வகித்தாா்.விவசாய சங்க பொறுப்பாளா் சி.எம்.நடராஜன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். தோ்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. விவசாய சங்க மாவட்டத் தலைவா் பி.குணசேகரன், நிா்வாகிகள் எஸ்.பரசுராமன், முல்லைவாசன், கே.முருகானந்தம், பி.காத்தவராயன், வி.குபேந்திரன், ஜி.மாா்கபந்து, ஆா்.மகாதேவன், எம்.அண்ணாமலை, ஜி.வி.முனிசாமி, சி.எம்.தசரதன், என்.லெனின், எம்.ராஜா, சரத்குமாா், சிவஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.