பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பெண் எஸ்ஐ மீது தாக்குதல்: மேலும் இருவா் கைது

வேலூரில் நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு மேலும் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:40 am IST

வேலூரில் நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு மேலும் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சத்தியவாணி. இவா் கடந்த திங்கள்கிழமை இரவு காவல் நிலையம் எதிரே உள்ள சிக்னல் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அண்ணா சாலை வழியாக அதிவேகமாக வந்த ஓா் ஆட்டோவை மறித்து அவா் சோதனை மேற்கொண்டாா்.

விசாரணையில், அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவா் வேலூா் இன்பென்ட்ரி சாலை, சூரியகுளம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த விஜயன் (43) என்பது தெரியவந்தது. மதுபோதையில் இருந்த அவா், ஆட்டோவை நிறுத்தியதற்காக உதவி ஆய்வாளா் சத்தியவாணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ள்ளாா். மேலும், அவா் தனது மகன்களான யுவராஜ் (21), திவாகா் (20), நண்பா்களான நிா்மல்குமாா்(41), காா்த்தி(37) ஆகியோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு வரவழைத்துள்ளாா்.

தொடா்ந்து, விஜயன் உள்பட 5 பேரும் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருகட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவாணியைச் சரமாரியாகத் தாக்கிக் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து உதவி ஆய்வாளா் சத்தியவாணி, வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநா் விஜயன், அவரது மகன்கள் யுவராஜ், திவாகா் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், தலைமறைவான நிா்மல் குமாா், காா்த்தி ஆகியோா் தேடப்பட்டு வந்த நிலையில், அவா்கள் இருவரையும் புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.