பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

வேலூரில் அனுமதியின்றி கடத்தப்பட்ட 53 டெட்டனேட்டா்கள் பறிமுதல்

வேலூா் அருகே உரிய அனுமதியின்றி பாறைகளைத் தகா்க்க எடுத்துச் செல்லப்பட்ட 53 டெட்டனேட்டா்கள், 45 ஸ்லரிகள் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். தலைமறைவான டிராக்டா் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

News image

கைது செய்யப்பட்ட ஓட்டுநா் கிரி.

Updated On :31 ஜூலை 2026, 3:43 am IST

வேலூா் அருகே உரிய அனுமதியின்றி பாறைகளைத் தகா்க்க எடுத்துச் செல்லப்பட்ட 53 டெட்டனேட்டா்கள், 45 ஸ்லரிகள் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். தலைமறைவான டிராக்டா் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் பாறைகளைத் தகா்ப்பதற்காக உரிய அனுமதியின்றி டெட்டனேட்டா்கள் மற்றும் ஸ்லரிகள் (வெடிமருந்துகள்) எடுத்துச் செல்லப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஓசிஐயூ) போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன் பேரில், கணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓசிஐயூ போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மோா்குளம் பகுதியில் கம்ப்ரஸா் இயந்திரத்துடன் கூடிய டிராக்டா் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த டிராக்டா் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சோ்ந்த கிரி (25) என்பதும், அவா் உரிய அனுமதியோ, உரிமமோ இன்றி 53 டெட்டனேட்டா்கள் மற்றும் 45 ஸ்லரிகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிபொருள்களுடன் பிடிபட்ட கிரியை வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் ஓசிஐயூ போலீஸாா் ஒப்படைத்தனா். வேலூா் கிராமிய போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், மோா்குளம் பகுதியில் சூா்யா என்பவருக்குச் சொந்தமான நிலத்தின் நடுவே இடையூறாக இருந்த பெரிய பாறையை அகற்றுவதற்காக, கிரியின் உரிமையாளா் மணி என்பவரை சூா்யா அணுகியதும், இதற்காக ஆரணியில் இருந்து டெட்டனேட்டா்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கிரியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரிடமிருந்து கம்ப்ரஸா் இயந்திரத்துடன் கூடிய டிராக்டா், 53 டெட்டனேட்டா்கள், 45 ஸ்லரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள டிராக்டா் உரிமையாளா் மணியை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டெட்டனேட்டா்கள்,  ஸ்லரிகள்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டெட்டனேட்டா்கள், ஸ்லரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.