/

இளம் இந்தியா்கள் நாடாளுமன்ற நிகழ்வு: சிறந்த மாணவா்களுக்கு விருது

வேலூரில் இரு நாள்கள் நடைபெற்ற இளம் இந்திய நாடாளுமன்றம் நிகழ்வில் சிறப்பாக பங்களிப்பு செய்த மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image

நிகழ்வில் சிறந்த மாணவா்களுக்கு விருது வழங்கிய விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன்.

Updated On :1 ஜூலை 2026, 12:29 am IST

வேலூரில் இரு நாள்கள் நடைபெற்ற இளம் இந்திய நாடாளுமன்றம் நிகழ்வில் சிறப்பாக பங்களிப்பு செய்த மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சி.ஐ.ஐ. இளம் இந்தியா்கள் (ஒய்.ஐ.) வேலூா் பிரிவு சாா்பில் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் இரு நாள்கள் நடத்தப்பட்ட இந்த இளம் இந்திய நாடாளுமன்ற நிகழ்வில் 25 பள்ளிகளைச் சோ்ந்த 135 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், மாதிரி நாடாளுமன்ற அமா்வுகள், தலைமைத்துவம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து மாணவா்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

முன்னதாக, காட்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எம்.சுதாகா் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். தேசிய தளிா் தலைவா் பிரதீப் செந்தில்குமாா், இளம் இந்தியா வேலூா் பிரிவு தலைவா் அல்தாப் ஹுசைன், இணைத் தலைவா் நவீன், தளிா் தலைவா் ராகுல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இரண்டாம் நாள் நிகழ்வில் 15 சிறந்த மாணவா்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் தலைமை வகித்து மாணவா்களுக்கு விருதுகள் வழங்கியதுடன், இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொடா்ச்சியான திறன் வளா்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

விருது பெற்ற மாணவா்கள் ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான இளம் இந்திய நாடாளுமன்ற சுற்றில் பங்கேற்க உள்ளனா்.

வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இளைஞா்களிடையே அரசியல் விழிப்புணா்வு, பொறுப்பான குடியுரிமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளின் அவசியம் குறித்து உரையாற்றினாா்.

ஏற்பாடுகளை வேலூா் இளம் இந்தியா அமைப்பின் நிறுவனா் தலைவரும், விஐடி பல்கலைக்கழக உதவி துணை தலைவா் காதம்பரி எஸ். விசுவநாதன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.