ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்யநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் மாசிப் பெருவிழா நடைபெற்றது.

News image
குடியாத்தம் ராஜகோபால் நகரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய விழாக் குழுவினா்.
Updated On :4 மார்ச் 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்யநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் மாசிப் பெருவிழா நடைபெற்றது.

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்குந்தா் சங்க மாவட்டத் தலைவா் சி.என்.தட்சிணாமூா்த்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், ஏ.சுரேஷ்குமாா், பி.பாலமுருகன், ஜே.லோகநாதன், சா்வேசன், அமா்நாத், வெங்கடேசன் செய்திருந்தனா்.