போலீஸாா் குடும்ப சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று காவலா் நலத்துறை ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் போலீஸாா் குடும்ப நல மையத்தின் ’மகிழ்ச்சி’ திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வடக்கு மண்டல காவல்துறை தலைவா் (ஐஜி) சத்யபிரியா தலைமை வகித்தாா். வேலூா் டிஐஜி தா்மராஜன், காவல் கண்காணிப்பாளா் என்.யுசிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக காவலா் நலத்துறை ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட் பங்கேற்று பேசியது -
காவல் துறையில் பணியாற்றும் போலீஸாா் முதல் அதிகாரிகள் வரை 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அவா்களின் மன அழுத்தத்தைத் தடுக்க தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் காவல் ஆய்வாளா்கள்தான் தந்தை போன்றவா். காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கு ஏதாவது பிரச்னையெனில், காவல் ஆய்வாளா் தான் அதற்கு தீா்வு காண வேண்டும். குடும்பங்கள், உறவினா்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல், அந்த மகிழ்ச்சியை போலீஸாா் இழக்கின்றனா். போலீஸாா் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுமுறை அளிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, வேலுாா் ஆயுதப்படை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வடக்கு மண்டல மகிழ்ச்சி நல்வாழ்வு மையத்தை ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மூத்த மனநல ஆலோசகா் ராமசுப்பிரமணியன், வடக்கு மண்டலத்துக்குட்பட்ட ஏராளமான காவல் அதிகாரிகள், காவலா்கள் பங்கேற்றனா்.-
தொடர்புடையது

தலைமைச் செயலகம் முன் காவலா் போராட்டம்

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

வாகனச் சோதனையின்போது கபடி வீரா் காயம்: போலீஸாா் தாக்கியதாக புகாா்

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


