தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது

வேலூரில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 4:20 am IST

வேலூரில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கொணவட்டம், காமராஜா் நகரை சோ்ந்த வெங்கடேசன் (23). இவா் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வேலூா் வடக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் வெங்கடேசனை பிடித்து நடத்திய விசாரணையில், வேலூா் சம்பத் நகரை சோ்ந்த தாமு, போதை மாத்திரை விற்பனை செய்வதாக தெரிவித்தாா். அதன்பேரில், தாமு வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, தாமுவின் மனைவி மோனிகா (25), சம்பத் நகரைச் சோ்ந்த ராஜபிரசாந்த் (22), வெங்கடேசன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தாமுவை தேடி வருகின்றனா்.