தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வேலூா்: 5 தொகுதிகளுக்கு 1,711 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

வாக்கு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் முன் ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

காட்பாடியில் 280, வேலூரில் 268, அணைக்கட்டில் 295, கே.வி.குப்பத்தில் (தனி) 265, குடியாத்தத்தில் (தனி) 319 என மொத்தம் 1,427 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. 5 பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை மாா்ச் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டன.

தொடா்ந்து, இந்த இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்பு லட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1,427 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த 20 சதவீதம் கூடுதல் என்ற அடிப்படையில் தலா 1,711 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகளும், கூடுதலாக 30 சதவீதம் என்ற அடிப்படையில் 1,853 விவிபேட் இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களின் கண்காணிப்பில் தலா 2 துப்பாக்கி ஏந்திய காவலா்களின் பாதுகாப்புடன் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அப்போது, கூடுதல் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாஸ்கரன், தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.