தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 1,427 வாக்குச்சாவடிகளில் பதற்றமான இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் முன்னிலை வகித்தாா். அப்போது, பதற்றமான வாக்குச்சாவடிக ளில் பாதுகாப்புப் பணி, அசம்பாவிதம் ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறை அமைப்பது, மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் அலுவலா்கள், பொது பாா்வையாளா்களுக்கு தகவல் தெரிவித்து சூழ்நிலையை கையாள்வது குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

இதுகுறித்து தோ்தல் அதிகாரிகள் கூறுகையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், காட்பாடியில் 17 வாக்குச்சாவடிகள், வேலூரில் 39, அணைக்கட்டில் 28, கே.வி.குப்பத்தில் 25, குடியாத்தத்தில் 21 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், 46 கிராமங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது இப்பகுதிகளில் இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.