ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு அறிக்கை

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

டாஸ்மாக் (கோப்புப்படம்)

Updated On :20 மே 2026, 12:04 am IST

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கூட்டம் அதிகமாக உள்ளது.

அங்கு ஏஎஸ்பியுடன் ஆலோசிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடையை மூட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடியில் உள்ள ஆதரவற்றோா் விடுதியில் காணாமல் போன குழந்தைகளை தேடி வருகின்றனா். காப்பகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஒருங்கிணைப்பின்பேரில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து காப்பக கண்காணிப்பாளா்கள், வாா்டன்கள், நடத்துநா்களை அழைத்து பின்பற்றவேண்டிய வழிமு றைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா்.