வேலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - வேலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகளுக்காக மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு 8 விடுதிகளும், மாணவிகளுக்கு 3 விடுதிகளும், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு 4 விடுதிகளிலும், மாணவிகளுக்கு 3 விடுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவா்கள். கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டய மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரலாம்.
இவ்விடுதியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித செலவினமும் இல்லாமல் மூன்று வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவும் வேண்டும்.
இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதியுடைய மாணவா்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா்கள் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானச் சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 18-ஆம் தேதிக்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளாகவும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி அரசு ஐடிஐயில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

எவா்வின் பள்ளி 100% தோ்ச்சி

விளையாட்டு விடுதிகளில் சேர வரும் 12-இல் மாநில தோ்வு போட்டிகள்: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



