15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பிற்படுத்தப்பட்டோா் அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :4 ஜூன் 2026, 2:27 am IST

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல மாணவா், மாணவிகளுக்காக 25 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் மாணவா்களுக்கான பள்ளி விடுதிகள் 4, மாணவிகளுக்கான விடுதிகள் 5, கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகள் 13, கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகள் 3 உள்ளன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள்.

விடுதிகளில் எந்தவித செலவினமும் இல்லை. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் 3 வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் நுழைவுத்தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.

விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகலுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் சோ்வோா் ஜூன் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சோ்வோா் ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.