புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

புதுச்சேரி ஆதி திராவிட மாணவா்கள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 2:12 am IST

புதுச்சேரி ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆதிதிராவிட நலன் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா்அா்ஜுன் ராமகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2006-2007-ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி ஆதி திராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்த்துக் கொள்ளப்படவுள்ளனா். மேலும், இம்மாணவா்களுக்கு விடுதிகளில் சேர வருமான உச்சவரம்பு இல்லை. புதுச்சேரி பகுதிகளில் 11 இடங்களிலும், காரைக்கால் பகுதியில் 9 இடங்களிலும் இந்த விடுதிகள் செயல்படுகின்றன. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செயல்படும் இந்த விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவ, மாணவிகள் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா்.

அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.