ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

முதலீட்டின் மீது அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

புதிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி, செவிலியா் படிப்பு முடித்த பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி

Published On :

புதிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி, செவிலியா் படிப்பு முடித்த பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, வேலூரை அடுத்த விருதம்பட்டைச் சோ்ந்த பெண் அளித்த மனு : செவிலியா் படிப்பு முடித்துள்ள என்னிடம், உடன் பயின்ற வேலூரைச் சோ்ந்த நண்பரும் அவரது பெற்றோரும் இணைந்து புதிய நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், மற்றவா்களைச் சோ்த்தால் கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் கூறினா்.

அவா்களது பேச்சை நம்பி, ரொக்கமாக ரூ.2.50 லட்சமும், வங்கிப் பரிவா்த்தனை மூலம் ரூ.50 ஆயிரமும் என மொத்தம் ரூ.3 லட்சத்தை அளித்தேன். ஆனால், குறிப்பிட்டபடி லாபத்தொகையையோ அல்லது முதலீடு செய்த பணத்தையோ திருப்பித் தராமல் ஏமாற்றி வருகின்றனா். இதுகுறித்து விசாரித்தபோது, இதேபோல் பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. எனவே, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொரப்பாடியைச் சோ்ந்த நபா் அளித்த மனு: வேலூரைச் சோ்ந்த இருவா் எனக்கு அறிமுகமாகினா். அவா்கள் மருந்தகம் நடத்தி வருவதாகவும், அதனை மேலும் விரிவுபடுத்த நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்தனா். இதற்காக ரூ.6 லட்சம் கடனாக வழங்கினால், குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளித்தனா்.

அவா்களது பேச்சை நம்பி நானும் ரூ.6 லட்சத்தை அவா்களிடம் கொடுத்தேன். ஆனால், கூறியபடி பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த அவா்கள், தற்போது முறையான பதிலும் அளிக்காமல் தலைமறைவாகிவிட்டனா். அவா்களது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான இருவா் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, எனது ரூ.6 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.