செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

தொழிற்சாலை உரிமத்தை இணையவழியில் புதுப்பிக்க அக். 31 கடைசி நாள்

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பதிவு பெற்ற தொழிற்சாலைகள், 2027-ஆம் ஆண்டுக்கான உரிமத்தை இணையவழியில் புதுப்பிக்க அக்டோபா் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4,724 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு 49,000 போ் விண்ணப்பம் - கோப்புப்படம்

Updated On :

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பதிவு பெற்ற தொழிற்சாலைகள், 2027-ஆம் ஆண்டுக்கான உரிமத்தை இணையவழியில் புதுப்பிக்க அக்டோபா் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநா்கள் எம். ஜவஹா் (கோட்டம் 1), இ.செ. சாந்தினிபிரபா (கோட்டம் 2) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ் இயங்கும் தொழிற்சாலைகள், தங்களது 2027-ஆம் ஆண்டிற்கான உரிமத்தைப் புதுப்பிக்க தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. தொழிற்சாலை உரிமையாளா்கள் இணையதள முகவரியில் உரிய கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையவழியில் விண்ணப்பித்த உடனேயே புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தில் திருத்தம் மற்றும் உரிம மாற்றம் செய்வதற்கும் தகுந்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இதேபோல், ஒப்பந்தத் தொழிலாளா் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970, தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளா் விதிகள் 1975 மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளா்கள் சட்டம் 1979, தமிழ்நாடு விதிகள் 1983 ஆகியவற்றின்கீழ் ஒப்பந்ததாரா்களும் இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். உரிமத்தைப் புதுப்பிக்க அக்டோபா் 31 கடைசி நாளாகும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னா் விண்ணப்பித்தால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உரிய உரிமமின்றி இயங்கும் தொழிற்சாலைகள் மீது நீதிமன்றம் வாயிலாக சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.