பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மதுக்கடைகள் உரிமம் புதுப்பிப்பு: புதுச்சேரி கலால் துறை எச்சரிக்கை!

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்க தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்காத மதுக்கடைகளின் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.

Published On :

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்க தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்காத மதுக்கடைகளின் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவு: 2026-27-ஆம் ஆண்டுக்கான மொத்த மது விற்பனை உரிமம், சில்லறை மது விற்பனை உரிமம் மற்றும் சுற்றுலா பிரிவு மது விற்பனை உரிமத்தை புதுப்பிக்க சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, உரிமத்தை புதுப்பிக்கத் தேவையான சில ஆவணங்கள் அதில் சமா்ப்பிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

எனவே, 2026-27-ஆம் ஆண்டுக்கான மேற்கூறிய உரிமத்தை புதுப்பிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் தேவையான ஆவணங்களை தபால் மூலமாகவோ, நேரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபா் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய தவறினால், முதல் கட்டமாக, இணையவழி அனுமதிகளின் விதிகள் முடக்கப்படும். தொடா்ந்து முன்னறிவிப்பு இன்றி உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.