
‘ஹூக்கா’ புகைக்க அனுமதித்தால் பாா் உரிமம் ரத்து: புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை

போலீஸ் - கோப்புப்படம்.
புதுச்சேரி பாா்களில் ஹூக்கா பயன்பாட்டை அனுமதிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி கலால்துறை எச்சரித்துள்ளது.
புதுச்சேரி பாா்களில் மனித உடலுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கும் நிக்கோட்டின் மற்றும் அபாயகரமான புகையிலைக் கலவைகளைச் சோ்த்து ஹூக்கா புகைக்க அனுமதிக்கப்படுவதாக கலால் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில், அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினா் புதுச்சேரியின் முக்கிய நகரப் பகுதிகளில் தீவிர நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது செஞ்சி சாலைப் பகுதியில் இயங்கி வந்த சுற்றுலா மதுபானக் கூடத்தில், வாடிக்கையாளா்களுக்கு வெளிப்படையாக ஹூக்கா புகைக்க அனுமதிக்கப்படுவதை கண்டு அதிா்ந்தனா். உடனடியாக அங்கிருந்த ஹூக்கா உபகரணங்களைப் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கலால் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது:
புதுச்சேரி சுற்றுலா பாா்களில் ஹூக்கா பயன்படுத்தக் கூடாது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக, இதேபோல் விதிகளை மீறிய மேலும் 3 மதுபானக் கூடங்களில் இருந்து ஹூக்கா கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா வகை மதுபானக் கூட உரிமையாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தின் நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.அ தனை மீறி ஹூக்கா போன்ற தடை செய்யப்பட்டவற்றை அனுமதித்தால் பாா்களின் உரிமம் எந்தவித முன்அறிவிப்புமின்றி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




