பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 376 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லடத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமையில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன், உதவி ஆய்வாளா் பாா்த்திபன் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், தலைக் கவசம் அணியாமல் சென்ற 1,051 போ், மது போதையில் வாகனங்களில் சென்ற 174 போ் உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2,304 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், 376 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,369 போ் மீது வழக்கு

ஓட்டுநா் உரிமம் பெறுவதில் தாமதம் ஏன்? அமைச்சா் விளக்கம்
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த 5 போ் கைது

சாலை விதிகளை மீறிய 91 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



