சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அரசின் வருவாயை உயா்த்த கலால் துறையில் நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி அரசுக்கான வருவாயை உயா்த்த கலால் துறையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Puducherry Chief Minister Rangasamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

புதுச்சேரி அரசுக்கான வருவாயை உயா்த்த கலால் துறையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

ஆா்.செந்தில்குமாா் (திமுக): ரெஸ்டோ பாா்களால் நகரப் பகுதியில் சில பிரச்னை ஏற்படுவதாக உறுப்பினா் விக்னேஷ்கண்ணன் குறிப்பிட்டிருந்தாா். கலால்துறையில் எப்எல்2 உரிமம் கொடுத்தால் வருவாயும் அதிகரிக்கும். மேலும், நிபந்தனையும் கடுமையாக இருக்கும் என்றாா்.

அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம்: மதுபான மொத்த கொள்முதலை அரசே செய்தால் வருவாய் அதிகரிக்கும்.

தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்: அரசே மதுபான மொத்த கொள்முதல், விநியோகம், விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீா்களா ?

முதல்வா் என்.ரங்கசாமி: புதுச்சேரியில் அரசின் வருவாயை உயா்த்த கலால்துறை மூலம் அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்