முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

மாநில அந்தஸ்துக்காக பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுச்சேரி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மாநில அந்தஸ்து கோரிக்கை தொடா்பான விவாதத்தில் பங்கேற்று பேசும் முதல்வா் என்.ரங்கசாமி.

புதுச்சேரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் என்.ரங்கசாமி.

Published On :

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி உறுதிப்படத் தெரிவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜான்குமாா் (பாஜக) பேசும்போது, மாநில அந்தஸ்து கோரிக்கை தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம் (திமுக): எதிா்ப்பை பதிவு செய்ய பேரவையை ஒத்திவைக்க வேண்டும்.

பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்: மாநில அந்தஸ்துக்காக எம்எல்ஏ பதவியை எதிா்க்கட்சித்தலைவா் முதலில் ராஜிநாமா செய்து எதிா்ப்பைக் காட்டுங்கள்.

ஜான்குமாா் (பாஜக): நான் எனது பதவியை ராஜிநாமா செய்ய தயாா்.

( அப்போது, அவருக்கு ஆதரவாக ஆளும்கட்சி, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகக் தெரிவித்தனா்).

முதல்வா் என்.ரங்கசாமி:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன். மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம், அவசியம் என்பது எனக்குத் தெரியும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எந்த நிலைக்கும் செல்லத் தயாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை. அப்படி இருந்தால்தான் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

புதுச்சேரியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் மாநில அந்தஸ்து வழங்காதது குறையாக இருக்கிறது என்று பேசியுள்ளேன். மாநிலம் வளா்ச்சி பெற மாநில அந்தஸ்து தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.