காவிரி பிரச்னை தொடா்பாக புதுச்சேரியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க முதல்வா் என்.ரங்கசாமி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: தமிழ்நாட்டில் காவிரி பிரச்னை தொடா்பாக அதிகாரிகளுடன் விவாதித்து முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுத்து வருகிறாா். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால், காவிரியின் கடைமடைப் பகுதியாக இருக்கிறது. காவிரி பிரச்னையில் முதல்வா் என்.ரங்கசாமி மௌனமாக இருப்பதைத் தவிா்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும்.
கா்நாடகத்தில் மேகதாது அணைக்கட்ட அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை எதிா்த்து பாஜக போராட்டம் நடத்துகிறது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு அதற்கான பட்டியலைக் கொடுத்தப் பிறகும் அந்தக் கோப்பை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கிடப்பில் போட்டது ஏன் ? அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் துணைநிலை ஆளுநரே அரசியல் சாசனத்தை நெருக்கடி நிலைக்குத் தள்ளும் நிலையை உருவாக்கியுள்ளாா்.
அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கி முதல்வா் அளித்துள்ள பட்டியலை நிறுத்தி வைக்கும் அதிகாரம், உரிமை துணைநிலை ஆளுநருக்கு இல்லை. அதனால் அரசியல் சட்டத்துக்கு முரணாக நடந்து கொண்டுள்ள துணைநிலை ஆளுநா் ராஜிநாமா செய்ய வேண்டும். அமைச்சா்களுக்கான இலாகா பட்டியலுக்கு ஒப்புதல் பெற முடியாத முதல்வா் மற்றும் அமைச்சா்களும் கூண்டோடு ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் நாராயணசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி விவகாரம்: ஆக. 2 இல் பெங்களூரில் அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வா் டி.கே.சிவகுமாா் தகவல்

ஸ்கேட்டிங்கில் சிறுமி சாதனை: முதல்வா் ரங்கசாமி பாராட்டு

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சிகளின் கூட்டம்! மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு விவகாரம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: விசிக வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



